follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉலகம்ஆண் குழந்தை பிறக்க கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணிகளை அடித்த வைத்தியர்

ஆண் குழந்தை பிறக்க கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணிகளை அடித்த வைத்தியர்

Published on

பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென குறித்த கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணியை அடித்த உள்ளூர் வைத்தியர் ஒருவரை குறித்த பகுதி பொலிஸார் தேடி வருகின்றனர்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சென்று, தனது தலையில் இருந்த ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள் தலையில் ஆணி எப்படி வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது அவர், “நான் கர்ப்பமாக இருக்கிறேன். இந்தப் பிரசவத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறக்க சடங்குகளைச் செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் கேட்டுக் கொண்டேன். அவரோ, எனது தலையில் 5 சென்றிமீற்றர் அளவிலான ஆணிகள் ஐந்தை அடித்து அனுப்பினார். ஆனால் எனக்கு அதனால் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. எனவே அதை அகற்ற வேண்டும்” என்றார்.

“அந்த ஆணிகள் மூளையில் தொடவில்லை. ஆணி அறையப்பட்டதால் மிகுந்த வலியில் இருந்த பெண் முதலில் தானே ஆணியை அறைந்து கொண்டதாகக் கூறினார். பின்னர் தான் அவர் தலையில் ஆணியை அந்த வைத்தியர் அறைந்தது தெரியவந்ததாக வைத்தியர்கள் கூறினர்.

இதையடுத்து வைத்தியர்கள் அந்தப் பெண்ணின் தலையில் இருந்து ஆணியை அப்புறப்படுத்தி அனுப்பினர். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலை சீ.சீ.டிவி கெமராக்களின் காட்சிகளைக் கொண்டு அந்தப் பெண்ணை தேடி வருதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில்,அவரை விசாரித்து அந்த உள்ளூர் வைத்தியரை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து விமான மற்றும் நிலைத்தடிப் போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும்...

தெலுங்கானாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு

ஹைதராபாத் - தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் இரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலையில் ஊழியர்கள்...

தான்சானியாவில் பேரூந்து விபத்தில் 40 பேர் உயிரிழப்பு

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மொசி-டங்கா வீதியில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்று (29) பயணியர் பஸ்கள் இரண்டும் நேருக்கு நேர்...