பல ஆண்டுகளாக விண்வெளியைச் சுற்றி வரும் ஒரு ரொக்கெட்டின் பகுதி இன்று சந்திரனுடன் மோத உள்ளது.
மேலும் விண்வெளி குப்பைகள் தற்செயலாக சந்திரனின் மேற்பரப்பில் மோதுவது இதுவே முதல் முறையாகாவிருக்கும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இது இன்னும் சிறுதி நேரத்தில் மூன்று டொன் எடையுள்ள ரொக்டெ்டின் பகுதி சுமார் 5,500 மைல் (மணிக்கு 8,851 கிலோமீட்டர்) வேகத்தில் சந்திரனைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த நிகழ்வு பூமியிலிருந்து பார்க்க முடியாது, ஏனெனில் அதன் தாக்கம் நிலவின் தொலைதூரத்தில் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக சந்திரனில் ஏற்படும் தாக்கத்தின் விளைவுகள் சிறியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.