follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் பிரச்சினை அடுத்த வாரம் முடிவுக்கு

எரிபொருள் பிரச்சினை அடுத்த வாரம் முடிவுக்கு

Published on

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் தீர்க்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. டி. ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார்,

“வலு சக்தி நாட்டுக்கு ஒரு பலம்” என்ற தொனிப்பொருளில் இன்று (10) ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏற்கனவே டீசல் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன், இந்த மாதம் நான்கு கப்பல்களில் இருந்து 172,000 மெட்ரிக் தொன் டீசல் கிடைக்கவுள்ளதாகவும், அவ்வாறு கிடைக்கும் எரிபொருள் விரைவாக விநியோகிக்கப்படும் என்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி. ஆர். ஒல்கா மேலும் தெரிவித்தார்.

மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான பல கச்சா எண்ணெய்க் கப்பல்கள் (30,000 மெட்ரிக் தொன்) பெறப்பட்டுள்ளது அதன் மூலம் எரிபொருள் எண்ணெய் பயன்படுத்தும் வெஸ்ட் கோர்ட் போன்ற மின் உற்பத்தி நிலையங்கள் முழுமையாக இயங்க முடியும் என்று செயலாளர் சுட்டிக்காட்டினார். மார்ச் மாதம் 20ஆம் திகதி அளவில் மேலும் சில கச்சா எண்ணெய்க் கப்பல்கள் வரவுள்ளன.

“எரிபொருள் கையிருப்பு கிடைத்ததும், தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகள் மிக விரைவாக தீரும். எங்களின் திட்டங்களின்படி தேவையான டொலர்களைப் பெற்றுக்கொள்வது குறித்தும் உரிய தரப்பினருக்குத் தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்த அழுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி...

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...