ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அந்தச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இது தொடர்பில் தெரிவித்தார்.