நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதையும், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதையும் தடுக்கும் வகையில் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட குழுவிற்கு இன்று (16) நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.