follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1நாளாந்த மின்வெட்டு 15 மணிநேரம் வரை நீடிக்கக்கூடும்!

நாளாந்த மின்வெட்டு 15 மணிநேரம் வரை நீடிக்கக்கூடும்!

Published on

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின்வெட்டு 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலநேரம், எதிர்காலத்தில், மின்வெட்டு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின்விநியோக நேர அட்டவணையை வெளியிடுவது இலகுவானதாக இருக்கும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தற்போதுவரையில், நீர் மின் உற்பத்தியில், சுமார் 1, 200 மெகாவொட் மின்சாரத்தை வழங்கக்கூடிய இயலுமை இருக்கின்றபோதிலும், நீர் இன்மையால், மதிய நேரத்தில் 300 மெகாவொட் மின்சாரத்தையும், இரவு நேரத்தில் 700 மெகாவொட் மின்சாரத்தையும் மாத்திரமே வழங்கமுடியும்.

அதேநேரம், எரிபொருளில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்களில், 1, 700 மெகாட் அளவில் கொள்ளளவு இருக்கின்றபோதிலும், எரிபொருள் இன்மையால், 1,000 மெகாவொட் மின்சாரத்தை மாத்திரமே வழங்க முடியும்.

ஆனால், இரவு நேரத்தில் மாத்திரம் 1, 800 மெகாவொட் மின்சாரத்துக்கான கேள்வி உள்ளது.

எனவே, விநியோகத்தில் நிச்சயமாக வீழ்ச்சி உள்ளது தற்போது வரையில், பாஜ் மின்னுற்பத்தி நிலையத்திற்கும், களனிதிஸ்ஸ கூட்டு மின்னுற்பத்தி நிலையத்திற்கும், 1,500 மெட்ரிக் டன் எரிபொருள் மாத்திரமே கிடைத்துள்ளது.

எரிபொருளில் இயங்கும் வேறு எந்தவொரு மின்னுற்பத்தி நிலையத்திற்கும், எரிபொருள் கிடைக்கவில்லை.

தாங்கள் அறிந்த வகையில், இன்றும் நாளையும் எரிபொருள் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் 10 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.

இந்த நிலையில், வரும் நாட்களில், 12 மணித்தியாலங்களாகவும், 15 மணித்தியாலங்களாகவும் அதிகரிக்க வேண்டி ஏற்படக்கூடும்.

எனவே, மின்சாரம் விநியோகிக்கப்படும் நேரத்தைக் கூறுவது சிறந்ததாகும்.

விரைவாக எரிபொருளைப் பெற்றுக்கொடுத்தால், மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை இயன்றளவு குறைக்க முடியும் என அரசாங்கத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக, மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...