அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது.
அத்துடன், எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.