ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பிலேயே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவும் சற்று முன்னர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.