கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடத்த முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் LMD தர்மசேன விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பரீட்சார்த்திகள் முன்வைத்த கோரிக்கையைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,