நேற்று லொறிகள் ஊடாக எரிவாயு இறக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தும் குறித்த பணி இடம்பெறவில்லை எனவும் குறித்த நடவடிக்கை தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிவொன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரிகளை கோப் குழுவிற்கு அழைத்து விசாரணை நடத்த கோரியுள்ளதாகவும் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Despite assurance being provided by Litro Gas that gas would be unloaded yesterday via lorries, it has not happened. I have instructed the Chairman to provide an immediate explanation. I have also requested that COPE summons Litro officials as well.
— Ranil Wickremesinghe (@RW_UNP) May 19, 2022