நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் பகலுணவை இடை நிறுத்துமாறு வலியுறுத்தி ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 900 பாராளுமன்ற சேவையாளர்களுக்கான பகலுணவிற்கு மாத்திரம் பெருந்தொகை நிதி செலவிடப்படுகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவை இடை நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம்.
நாட்டுமக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இறுதி தீர்வு காணும் வரை இந்த கோரிக்கையை செயற்படுத்தமாறு வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.