அண்மையில் மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, பேருந்தொன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரை இன்று நுகேகோடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் தெரணியகலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும், விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.