follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஅவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Published on

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

மேலும், சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றமில்லை எனவும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சொந்த நாட்டுக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமையை தான் உறுதிப்படுத்துவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் அறிவித்துள்ளார்.

இன்று இடம்பெறும் அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் இலங்கை அதிகாரிகளினால் கடந்த வாரம் படகொன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் இரண்டாவது படகை தடுத்து நிறுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...