follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉலகம்சவுதி மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை

சவுதி மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை

Published on

சவுதி அரேபியாவில் தற்போது கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அந்நாட்டு மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொவிட் வைரஸ் பரவி வருகிறது.

பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்திற்கு வந்த பிறகு கொவிட் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மட்டும் கொவிட் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது மீண்டும் கொவிட் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி தொற்று விகிதம் கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து சவுதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், யேமன், சோமாலியா, எத்தியோப்ப்யா, காங்கோ குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மெனியா, பெலாரஸ், வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை

15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு இன்று (ஜூலை 1)...

ட்ரம்ப் நிர்வாகத்தின் நிதியுதவி குறைப்பு – உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் சாத்தியம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் மேற்கொண்ட மனிதாபிமான நிதியுதவி குறைப்பு நடவடிக்கைகள், உலக நாடுகள்,...

தாய்லாந்தின் பிரதமர் பதவி இடைநீக்கம்

தாய்லாந்தின் பிரதமராக இருந்த பெட்டோங்தார்ன் சினவத்ரா தனது பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவலளிக்கின்றன. இந்த முடிவுக்கு...