25 தொன்களுக்கும் அதிக நிறையுடையதும் 260 மில்லியன் பெறுமதியானதுமான ஒரு தொகுதி மருந்துப்பொருட்களை பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்தார்.
ஐ.என்.எஸ்.கரியால் கப்பலில் வந்தடைந்த இந்த உதவிப்பொருட்களில் இலங்கையில் உள்ள மீனவர்களின் பயன்பாட்டிற்கான மண்ணெய்யும் உள்ளடங்கியுள்ளது. அடுத்துவரும் நாட்களில் இப்பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.