follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடு4 மாணவர்கள் நீரில் மூழ்கியதில் 2 பேர் சடலமாக மீட்பு!

4 மாணவர்கள் நீரில் மூழ்கியதில் 2 பேர் சடலமாக மீட்பு!

Published on

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று மதியம் 4 மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த 15,16 வயதுகளையுடைய மாணவர்கள் இன்று மாலை ஈரட்டைபெரியகுளத்திற்கு சென்றுள்ளனர்.

4 மாணவர்களும் இணைந்து தமது வளர்ப்பு நாயை குளிர்ப்பாட்டி நீராடிக் கொண்டிருந்த சமயத்தில் 4 மாணவர்களும் நீரில் முழ்கியுள்ளனர்.

குறித்த நால்வரையும் மீட்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் இணைந்து அயலவர்களின் உதவியுடன் குளத்தில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட சமயத்தில் மற்றைய இரு மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட இரு மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...