follow the truth

follow the truth

May, 21, 2025
Homeஉள்நாடுநாளாந்த எரிவாயு தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவிப்பு

நாளாந்த எரிவாயு தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவிப்பு

Published on

தற்போது, நாளாந்த எரிவாயு தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்கு புதிய சிலிண்டர்களை ஓடர் (orders) செய்யும் லிட்ரோ கம்பனியின் செயற்திட்டமே இதற்குக் காரணம்.

நாடு எதிர்நோக்கும் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக லிட்ரோ நிறுவனம் அண்மையில் இந்த முறையை அறிமுகப்படுத்தியது.

இதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் கணிசமான இலங்கையர்கள் டொலர்களை செலுத்தி புதிய சிலிண்டர்களை ஓடர் (orders) செய்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாளாந்த எரிவாயு தேவை சற்று குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுயள்ளார்.

மக்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துவதே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயா மற்றும் அம்பேவெலவிற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

இம்முறை பொசொன் நிகழ்விற்கு முழு அரச அனுசரனை

2025 ஆம் ஆண்டு முழு அரச அனுசரனையுடன் பொசொன் தினத்தை நடத்துவது தொடர்பில்,மிஹிந்தலை ராஜமஹா விகாராதிபதி வண. வலவாஹெங்குனுவெவே...

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம்(23) நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...