follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய சபையில் இணையாது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய சபையில் இணையாது!

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய சபையில் இணையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்த அவர், இதனை குறிப்பிட்டார்.

தேசிய சபையின் ஆரம்பக் கூட்டம் நாளை (29) நடைபெறவுள்ளது. சபாநாயகர்
மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 10.30 மணியளவில் இந்த சந்திப்பு ஆரம்பமாகவுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் யோசனையின் கீழ், சகல அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய தேசிய சபைக்கு பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, சபாநாயகர் கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்...

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நிறைவு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி,...

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...