எவ்வாறாயினும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் முன்னணி கோதுமைமா இறக்குமதி நிறுவனங்களான பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு கிலோ கோதுமை மா, 270 ரூபாய் முதல் 283 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை பேக்கரி பொருட்களின் விலை 400% அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், பேக்கரி உரிமையாளர்களுக்கு பெறுமதிசேர் வரியை அரசாங்கம் விதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.
கோதுமை மாவின் விலையை குறைக்கும் வாக்குறுதியை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கோதுமைமாவின் விலையை 250 ரூபாயால் குறைக்கவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.