follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடு10.24 % ஆல் ஏற்றுமதி வருமானம் உயர்வு

10.24 % ஆல் ஏற்றுமதி வருமானம் உயர்வு

Published on

2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 10.24 % என்ற ஆண்டுக்கு ஆண்டு விகித்தில் 1,213.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்று இலங்கை சுங்கத் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆடை, தேயிலை, இறப்பர் சார்ந்த தயாரிப்புகள், மின்சாரம் மற்றும் மின்னணு பாகங்கள், மசாலா மற்றும் செறிவூட்டப்பட்ட வைரங்கள், இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், உணவு மற்றும் பானங்கள், கடல் உணவு மற்றும் அலங்கார மீன்கள் போன்ற முக்கிய தயாரிப்புத் துறைகள் ஓகஸ்ட் மாதம் அதிகரித்த ஏற்றுமதியைப் பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.

2022 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் சிறந்த 10 ஏற்றுமதி சந்தைகளில் வலுவான ஏற்றுமதி வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி இலக்கு 2022 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 2 பில்லியன்  டொலர்களாக பதிவாகியுள்ளதாகவும் இது 2021ஆம் ஆண்டில் பதிவான1.9 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் ஆண்டுக்கு 21.19% அதிகரிப்பு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதிகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் 12.91 % அதிகரித்து, 682.56 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை...