follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுவிவசாய அமைச்சின் மேலதிக ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற்றம்

விவசாய அமைச்சின் மேலதிக ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற்றம்

Published on

விவசாய அமைச்சின் மேலதிக ஊழியர்கள் அனைவரும் செலவு மேலாண்மை குறித்த அரசாங்க கொள்கையின் அடிப்படையில் பிற நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

இதன்படி, விவசாய அமைச்சில் நீண்டகாலமாக கடமையாற்றும் மேலதிக செயலாளர் உட்பட பல திணைக்கள அதிகாரிகள் வேறு நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது

தற்போது விவசாய அமைச்சில் 03 அபிவிருத்திப் பிரிவுகள், 03 கட்டுப்பாட்டுப் பிரிவுகள், 03 கணக்கியல் பிரிவுகள் மற்றும் 03 போக்குவரத்துப் பிரிவுகள் உள்ளதோடு, பெருமளவான அதிகாரிகள் கடமையின்றி இருப்பதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுவரெலியாவின் கிரகரி ஏரியில் படகு சவாரிக்கு தற்காலிக தடை

கடும் காற்று மற்றும் கடுமையான வானிலை காரணமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக நுவரெலியாவில் உள்ள கிரகரி ஏரியில் படகு சவாரி...

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் குறித்து நேற்றையதினம் (17) கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய...

இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2,138 முறைப்பாடுகள்

இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2,138 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு...