இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2,138 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரை 44 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், அதில் 31 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் இலஞ்சம், ஊழல், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளியிடத் தவறுதல், சட்டவிரோதமாக சொத்துக்கள் ஈட்டுதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் 42 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம், ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில், 45 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.