follow the truth

follow the truth

May, 5, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"நான் இப்போது எந்தக் கட்டுக்கோப்பும் இல்லாத சுதந்திர மனிதனாக இருக்கிறேன்"

“நான் இப்போது எந்தக் கட்டுக்கோப்பும் இல்லாத சுதந்திர மனிதனாக இருக்கிறேன்”

Published on

மூத்த திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்க அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க;

“அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து பல கச்சேரிகள் நடத்தி அதில் சம்பாதித்த பணத்தில், நம் நாட்டின் ஏழைக் குழந்தைகளுக்கு விநியோகிக்க லேப்டாப்களை ஸ்டாக் வாங்கினேன்.

கூடுதலாக, நாட்டில் உள்ள கோடீஸ்வரர்கள் குழுவும் எனக்கு மற்றொரு தொகுதி மடிக்கணினிகளை வழங்க ஒப்புக்கொண்டது. மேலும், அவர்கள் இந்நாட்டின் ஏழைக் குழந்தைகளுக்கு ஏராளமான ஆடைகளையும் வழங்கினர். அவைகள் அனைத்தும் பல கொள்கலன்களில் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றது.

நான் இப்போது பந்தங்கள் இல்லாத சுதந்திர மனிதனாக இருக்கிறேன். இந்த நன்கொடைகளை வறிய சிறுவர்களுக்கு பகிர்ந்தளித்து எதிர்காலத்தில் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என நம்புகிறோம்” என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

அமெரிக்காவில் இருந்து ஓமான் சென்றிருந்த ரஞ்சன் ராமநாயக்க இன்று அதிகாலை 04.50 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-206 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...