follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுதேர்தல்கள் ஆணைக்குழுவை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை

தேர்தல்கள் ஆணைக்குழுவை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை

Published on

தற்போதுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவை மாற்றுவது குறித்த எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் 50000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் போது சில தொழிநுட்ப பிரச்சினைகளால் வேலை இழந்த நானூறுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று(26) சந்தித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதையே அரசியலமைப்பு பேரவையின் ஊடாக இடம் பெறுவதாகவும், இதன் மூலம் நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் சட்டமன்றம் போன்றனவற்றை சமநிலைப்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும், அரசியலமைப்புப் பேரவைக்கு பல பொறுப்புகள் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கூடிய அரசியலமைப்பு பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தனது கவனத்தை திருப்பிய எதிர்க்கட்சித் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு தவிர்ந்த, ஏனைய ஆணைக்குழுக்களுக்கு விண்ணப்பங்களை கோருவதாக முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் நடக்கும் போது தற்போதுள்ள தேர்தல் ஆணைக்குழுவை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவ்வாறு மாற்றவே முடியாது எனவும் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதுள்ள தேர்தல் ஆணைக்குழு உள்ளவாறே செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மக்களின் இறையான்மைக்கு எதிராக செயற்படுவது பாரதூரமான குற்றமாகும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடிய பாரிய குற்றமாகும் எனவும் தெரிவித்தார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...