follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Published on

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில் பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தடையில்லை என தெரிவித்த நீதிபதி, மே 10ஆம் திகதி விசாரணை நடைபெறும் என்றும், சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்துள்ளார்.

வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் சதொச ஊழியர்களை அவர்களது கடமைகளிலிருந்து விலக்கி அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியதாக தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

போலிச் செய்தி தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

“ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது” – சஜித்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் கடிதத்தில் ஈரான்...

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த தீர்மானம்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...