follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉலகம்அமெரிக்காவில் பனி புயல் தாக்கம் - 1,700 விமான சேவை இரத்து

அமெரிக்காவில் பனி புயல் தாக்கம் – 1,700 விமான சேவை இரத்து

Published on

அமெரிக்காவில் பருவ காலத்தில் ஏற்பட கூடிய பனி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், டெக்சாஸ் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டல்லாஸ் நகரில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் 50 சதவீதத்திற்கும் கூடுதலான விமான சேவை இரத்து செய்யப்பட்டன. 350 விமானங்களின் சேவையில் காலதாமதம் ஏற்பட்டது.மொத்தம், 1,700 விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டெக்சாஸில் பனியால் ஏற்பட்ட பாதிப்பால் 7 ஆயிரம் இடங்களில் மின் இணைப்பு தடைப்பட்டது. இந்த பனி புயலானது, டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ் மற்றும் டென்னசி மாகாணங்களில் இன்றும் தாக்கம் ஏற்படுத்த கூடும் என அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மைய நிபுணர் கூறியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சீன மின்சார வாகனங்களுக்கு அமெரிக்கா 100% இறக்குமதி வரி

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மூலோபாயமாக கருதப்படும் பல துறைகளுக்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 18 பில்லியன்...

ரஷ்ய – உக்ரைன் போர் மீண்டும் சூடுபிடித்துள்ளது

ரஷ்ய-உக்ரைன் போர் மீண்டும் உக்கிரமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியத்தில் ரஷ்யப் படைகள் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி...

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி கைது

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் மற்றுமொரு உயர் அதிகாரி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை...