follow the truth

follow the truth

May, 18, 2024
Homeவணிகம்எயார்டெல் Unlimited சலுகையான ரூ.888 Freedom Plus அறிமுகம்

எயார்டெல் Unlimited சலுகையான ரூ.888 Freedom Plus அறிமுகம்

Published on

தனது வாடிக்கையாளர்களுக்கு பணத்திற்கான பெறுமதியை தொடர்ந்து வழங்குவோம் என்ற அதன் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், Airtel Sri Lanka, இலங்கை இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான 6 சமூக ஊடக வலையமைப்புகளுக்கு அதிக பெறுமதி, சுதந்திரம் மற்றும் வரையறையற்ற அணுகலை வழங்கும் அதன் சமீபத்திய முற்கொடுப்பனவு Unlimited Freedom Packsகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Freedom Unlimited Packன் விலை ரூ. 888 மற்றும் வாடிக்கையாளர்களுக்கு TikTok, Instagram, Facebook, YouTube, Messenger மற்றும் WhatsApp போன்ற சமூக ஊடக பயன்பாடுகளுக்கு வரையறையற்ற அணுகலை வழங்குகிறது.

30GB Data (1GB/Day), வேறு எந்த நெட்வொர்க்குக்கும் வரையறையற்ற அழைப்புகள், 1,000 Airtel-Airtel SMSகள் மற்றும் 30 நாட்களுக்கு ஏனைய நெட்வொர்க்குகளுக்கு 50 SMSகள் உட்பட எயார்டெல்லின் பிரபலமான Freedom Packageகளின் அனைத்து சலுகைகளுடன் இந்த Package அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த Airtel Sri Lankaவின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி அஷிஷ் சந்திரா, “எங்கள் பாவனையாளர்களுக்கு பணத்திற்கு அதிக மதிப்பை வழங்குவதற்கான புத்தாக்கமான வழிகளைக் கண்டறிய எயார்டெல் குழு தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறது. எங்களின் ரூ.888 Freedom Plus Packageஐ அறிமுகப்படுத்துவதும், சமூக ஊடக வலையமைப்புகளுக்கான பரந்த அணுகலை செயல்படுத்துவதும் எங்கள் மதிப்பு அடிப்படையிலான, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு மற்றொரு வலுவான சான்றாகும்.” என தெரிவித்தார்.

“Airtel Freedom Plus 888 இன் அறிமுகத்துடன், நாங்கள் இப்போது இலங்கையின் முற்கொடுப்பனவு சந்தையில் விலை மற்றும் மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களுக்கான வரையறையற்ற அணுகல் அடிப்படையில் சிறந்த மதிப்பு முன்மொழிவை வழங்குகிறோம். அதனால்தான் எயார்டெல் Freedom Packsகளின் மதிப்புக்கு இணையான வேறு எந்த பெக்கும் சந்தையில் இல்லை.” என அவர் மேலும் கூறினார்.

தனது 4G நெட்வொர்க் அனுபவத்தை மேலும் விரிவுபடுத்துவதில் எயார்டெல்லின் குறிப்பிடத்தக்க முதலீட்டில் மற்றொரு முக்கியமான படி எயார்டெல் மூலம் புதிய மதிப்பு சார்ந்த பெக்குகளை அறிமுகப்படுத்துவதாகும். எயார்டெல் தற்போது இலங்கையில் உள்ள 90% க்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு அதிநவீன உள்கட்டமைப்பை நிறுவுவதற்கும் அதன் Mobile-Broadband Networkஐ மேம்படுத்துவதற்கும் அதன் முயற்சிகளை தொடர்வதன் மூலம் அதன் கவரேஜ் வசதிகளை வழங்குகிறது.

நாடு முழுவதும் தனது 4G வலையமைப்பை விரிவுபடுத்தும் திட்டத்திற்குப் பின்னர், இலங்கையில் மொபைல் தொலைத்தொடர்பு சேவையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய பெக்குகளை வழங்கும் முதல் நிறுவனமாக Airtel விளங்குவதோடு ‘Data-Rollover’ வசதி மற்றும் எந்த நெட்வொர்க்கிற்கும் வரையறையற்ற அழைப்புகளையும் வழங்கியுள்ளதுடன் பாவனையாளர்களிடமிருந்து நேர்மறையான பதிலையும் பெற்றுள்ளது.

எயார்டெல் இப்போது Freedom Packsகளுக்கு மாறிய பாவனையாளர்களின் சாதனையுடன் இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் பாவனையாளர் தளத்தைக் கொண்டுள்ளது, தனது விரிவான உலகளாவிய இருப்பு மற்றும் நிபுணத்துவத்தின் மூலம், ஏர்டெல் சமீப வருடங்களாக இலங்கையில் தனது பிரசன்னத்தை நிலையாக பலப்படுத்தி வருகிறது, சந்தையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய பெக்குகளை அறிமுகப்படுத்துகிறது, இலங்கையின் இளைஞர்களை வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்ட சமூக உந்துதல் கூட்டாண்மைகளில் ஈடுபடுகிறது மற்றும் முற்போக்கான தொழில்துறைக்காக பங்களிப்பை செய்கிறது.

ரூ.888 பேக்கேஜை செயல்படுத்த, வாடிக்கையாளர்களுக்கு ரூ.888ஐ நேரடியாக ரீலோட் செய்யவும், My Airtel ஆப் மூலம் செயல்படுத்தவும், Recharge Portal/ https://recharge.airtel.lk/ Airtel Sri Lanka Flagship Store வழியாக ரீசார்ஜ் செய்யவும் முடியும்.

எயார்டெல் லங்கா தொடர்பாக:
2009 ஆம் ஆண்டில் இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் ஶ்ரீலங்கா நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். Airtel Sri Lanka வழங்கும் தொழிநுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் சேவை சிறப்புகள் இலங்கை இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவியுள்ளது. தற்போது, ​​Airtel இலங்கையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் அதிநவீன 5G-தயாரான 4G வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது மற்றும் அதிகபட்ச மதிப்பை வழங்குவதற்காக அதன் நெட்வொர்க் கவரேஜை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

Airtel பற்றி மேலும் அறிய, MyAirtel ஆப் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் Airtel உடன் இணைக்கவும் அல்லது www.airtel.lk ஐப் பார்வையிடவும்

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

22ஆவது DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

கொழும்பு 02 நிப்போன் ஹோட்டலில் மே 07ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை யின் கரப்பந்தாட்ட வரலாற்றில்...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising Festival

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A's Advertising Festival அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை, ஏப்ரல் 26,...