follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉலகம்மலேரியாவுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி

மலேரியாவுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி

Published on

முதல் முறையாக ஆபிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து வருகிறது.

RTS, S என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்பூசி மலேரியாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டது.

​​கானா, கென்யா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் முன்னோட்டத் நோய்த்தடுப்புத் திட்டங்களின் வெற்றிக்குப் பிறகு, இப்போது மலேரியா அதிகமாகப் பரவும் சஹாராவுக்கு கீழே இருக்கும் ஆபிரிக்க நாடுகளிலும் தடுப்பூசி போட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

“இது ஒரு வரலாற்றுத் தருணம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

இதேவேளை, 100 க்கும் மேற்பட்ட மலேரியா ஒட்டுண்ணி வகைகள் உள்ளன. ஆப்பிரிக்காவில் பொதுவாகக் காணப்படும் மிகக் கொடிய பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் என்ற வகையைக் குறிவைத்து RTS, S தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நூறு ஆண்டுகால ஆய்வுகள், போராட்டங்களுக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பது மருத்துவ உலகின் குறிப்பிடத் தகுந்த சாதனையாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எலான் மஸ்க் நிறுவிய புதிய அரசியல் கட்சி : ட்ரம்ப் கடும் அதிருப்தி

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், “அமெரிக்கா பார்ட்டி” என்ற பெயரில்...

பாகிஸ்தானில் அடுக்குமாடி இடிந்து வீழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

கராச்சியில் அமைந்துள்ள ஒரு பழைய அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததாக சர்வதேச...

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும்...