ஜப்பானின் வான்வெளியில் சமீபத்தில் பறந்த அடையாளம் தெரியாத பொருட்கள் சீனா உளவு பார்க்க பயன்படுத்திய பலூன்களாக இருக்கலாம் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், பலூன் போன்ற வடிவத்துடன் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் ஜப்பானின் வான்வெளி வழியாகச் சென்றது கண்டறியப்பட்டது. ஆனால் அவை என்ன என்பதை ஜப்பான் உறுதிப்படுத்தவில்லை.
எனினும், இந்த பறக்கும் பொருட்களை சீனா உளவு பார்க்க பயன்படுத்தியதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறு சீன அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனவும் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
வான்வெளியை மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஜப்பான் கூறுகிறது. அமெரிக்கா தனது வான்வெளியில் உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் சீன பலூனை சுட்டு வீழ்த்தியதை அடுத்து, சீன பலூன்கள் குறித்து ஜப்பான் வெளியிட்டது.