follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுஎக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவு

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவு

Published on

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை உடனடியாகக் கைப்பற்றுமாறு கொழும்பு துறைமுக நிர்வாகத்துக்குக் கொழும்பு சுற்றுலா மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ட்ரைகோ மெரிடைம் தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராயந்த கொழும்பு சுற்றுலா மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கப்பல் தீப்பற்றியதால் தமது சேவை பெறுநருக்கு உரித்தான 6 கொள்கலன்கள் தீக்கிரையாகியுள்ளதாகக் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த கப்பலில் உள்ள கொள்கலன்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதால், தமது சேவைப்பெறுநருக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை நிவர்த்திக்கும் பொருட்டு அக்கப்பலை கையகப்படுத்த உத்தரவிடக்கோரி மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகோரியிருந்தார்.

மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் அக்கப்பலை கையகப்படுத்த உத்தரவிட்டது. இவ்வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானம்

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று நீதிமன்றுக்கு

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (31) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சட்டவிரோதமான...