ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் நேற்று முன்தினம் (15) இரு மாணவ குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் அறுபது இலட்சம் ரூபாய் பல்கலைக்கழகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து, பலகலைக்கழக பாதுகாப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளது.
மாணவர் விடுதியின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், பல்கலைக்கழகத்தின் வாயில் ஒன்றும் உடைக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் நிர்வாகத் துறைகளில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில், சந்தேகப்படும்படியான மாணவர்கள் குறித்து நிர்வாகத் துறையினர் பொலிசில் முறைப்பாடு அளிக்க உள்ளனர்.