இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS சுகன்யா’ என்ற கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
101 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பலில் 106 பணியாளர்கள் உள்ளனர்.
இலங்கை வந்துள்ள இந்திய கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளிலும் ஈடுபடுவரென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, ‘INS சுகன்யா’ நாளை நாட்டிலிருந்து வெளியேறவுள்ளது.