follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇந்தியா செல்கின்றார் அமைச்சர் அலி சப்ரி

இந்தியா செல்கின்றார் அமைச்சர் அலி சப்ரி

Published on

வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, மார்ச் 02 – 04 வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

புதுடில்லியில் நடைபெறவுள்ள புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, இந்தியா செல்லவுள்ளார்.

இந்த மாநாடு, இந்திய வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பார்வையாளர் ஆய்வு அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இம் மாநாட்டின் போது, 2023 மார்ச் 03ஆந் திகதி நடைபெறவுள்ள ‘பிளவுபட்ட உலகை குணப்படுத்துதல்’ (Healing a Divided World) மற்றும் ‘வாக்குறுதியின் பைட் அலகுகள்: தொழில்நுட்பம் எவ்வாறு சமூகங்களை உயர்த்துகின்றது’ (Bytes of Promise: How can Technology Lift Communities) ஆகிய தலைப்புக்களிலான இரண்டு விஷேட குழு விவாதங்களில் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்..

மாநாட்டின் பக்க அம்சமாக, பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வழிகளில் கவனம் செலுத்தும் இருதரப்புக் கலந்துரையாடல்களுக்காக அமைச்சர் பல நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...