follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுஉயிர்த்த ஞாயிறு வழக்கிலிருந்து ஜனாதிபதியை விடுதலை செய்ய உத்தரவு

உயிர்த்த ஞாயிறு வழக்கிலிருந்து ஜனாதிபதியை விடுதலை செய்ய உத்தரவு

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால், தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்ததுடன், தமது கட்சிக்காரர் தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சுட்டிக்காட்டினர்.

அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தற்போது வழக்குத் தொடர முடியாது என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து, பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தது.

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

யாழில் நாய் இறைச்சி : கடைக்கு சீல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற...

அடுத்து சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

இலங்கையையும் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக இன்று (18) முதல்...