follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுதுறைசார் மேற்பார்வைக் குழுக்கள் இன்று முதல் தடவையாகக் கூடவுள்ளது.

துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் இன்று முதல் தடவையாகக் கூடவுள்ளது.

Published on

எட்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் இன்று(08) மற்றும் நாளை(09) ஆகிய தினங்களில் முதல் தடவையாகக் கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் எட்டுக்குமான தலைவர்கள் முதலாவது கூட்டத்தில் நியமிக்கப்படவிருப்பதுடன், இதில் நான்கு குழுக்களுக்கான தலைவர்கள் ஆளும் கட்சியிலிருந்தும், நான்கு குழுக்களுக்கான தலைவர்கள் எதிர்க்கட்சியிலிருந்தும் நியமிக்கப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பதினேழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் சபையில் அறிவித்திருந்ததுடன், இதில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எட்டுக் குழுக்களே நளை மற்றும் நாளை மறுதினம் கூடவுள்ளன.

1) மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு
2) நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வை குழு
3) பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு
4) சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
5) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு
6) பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு
7) பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு
8) வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வை குழு

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனுவுக்கான உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி...

ரம்பொட பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அறிக்கை

ரம்பொட - கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி நுவரெலியா...

கடலில் மூழ்கி காணாமல் போன மூவரில் இருவரின் சடலங்கள் மீட்பு

வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள் இன்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பொகவந்தலாவயை...