follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1துறைகள் பல தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில்

துறைகள் பல தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில்

Published on

திட்டமிட்டபடி இன்று (14) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் நேற்றிரவு (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், தொழில் நடவடிக்கைகளை இடைநிறுத்துவது தீர்வாகாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றும் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கலந்துரையாடலில் ஜனாதிபதியின் இறுதித் தீர்மானம் எட்டப்படாததால், பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஷ்யாம் பன்னஹக்க நேற்றிரவு தெரிவித்தார்.

இன்று பிற்பகல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திலும் முக்கிய நகரங்களிலும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கல்விசார் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...