follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉலகம்பாகிஸ்தானின் IMF கடன் வசதி மேலும் தாமதம்

பாகிஸ்தானின் IMF கடன் வசதி மேலும் தாமதம்

Published on

பாகிஸ்தான் எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி மேலும் தாமதமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில தொழில்நுட்ப காரணங்களால் பாகிஸ்தான் கோரிய கடன் வசதி தாமதமாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் தற்போதுள்ள சிக்கல்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் ஒப்புதலையும் பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் தற்போது பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூழ்நிலைகளில் இருந்து விடுபட சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை விரைவான கடன் தவணையாக பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த நவம்பரில் பெறப்பட இருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை காரணமாக அது தடைப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் கோரும் மொத்த கடன் நிவாரணம் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அழுத்தம், நுட்பம், நடவடிக்கை – அரசு ஊழியர்கள் மீது அதிரடி தீர்ப்பு

அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இவர்...

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

கனடா பொருட்களுக்கு 35% வரி அமுல் – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருட்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல்...