follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1குடு அஞ்சுவுக்கு பிரான்சில் வைன் நிறுவனம்

குடு அஞ்சுவுக்கு பிரான்சில் வைன் நிறுவனம்

Published on

ரத்மலானை குடு அஞ்சு பிரான்சில் வைன் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் துபாயில் தண்ணீர் போத்தல்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உட்பட பல வர்த்தகங்களை நடத்தி வருவதாக அந்த நாடுகளின் நம்பகமான வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

குடு அஞ்சு பிரான்சில் அகதியாக வாழ்ந்து வருவதாகவும், அதனால் இந்த தொழிற்சாலை வேறு ஒருவரின் பெயரில் நடத்தப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.

துபாயில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை, ஆரோக்கிய மையம், சூப்பர் உணவகம், கட்டிட வளாகம் என பல நிறுவனங்களும் உள்ளதாக அந்நாட்டின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டிட வளாகத்தை வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என நம்பப்படும் படுவிட சாமர டுபாய் நாட்டில் தலைமறைவாக உள்ளதாகவும், கல்கிசை சேர்ந்த ஜூட் என்பவரும் துபாய் நாட்டில் தலைமறைவாக உள்ளதாகவும் அந்நாட்டு வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவந்துள்ளது.

குடு அஞ்சுவை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...