follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்துங்கள்

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்துங்கள்

Published on

75 ஆண்டுகளாக பாலஸ்தீனியர்களின் அரசியல், சமூக மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட சுதந்திர உரிமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர் எனவும், அவை அனைத்தையும் வெற்றிகொள்ளும் போராட்டத்திற்கு தான் தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பலஸ்தீனத்தில் நடப்பது மிகப்பெரிய மனித அவலம் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் இவ்வாறு பாதிக்கப்படும் போது, சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளாகிய நாமும் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பாலஸ்தீனம் சட்ட ரீதியானதோர் தேசம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் அமைந்துள்ள பலஸ்தீன தூதரகம் மற்றும் இலங்கை அரபுலக இராஜதந்திரிகள் கவுன்ஸில் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த NAKBA பேரிடர் தினத்தின் 75 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு நேற்றைய தினம்(22) சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்ப்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச நக்பா தின ஞாபகார்த்த சிறப்புரையினை நிகழ்த்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி...

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...