follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1இஸ்ரேலை கதிகலங்க வைக்குமா ஈரான் ஏவுகணை

இஸ்ரேலை கதிகலங்க வைக்குமா ஈரான் ஏவுகணை

Published on

ஈரான் தனது முதலாவது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் (hypersonic ballistic) ஏவுகணையை தயாரித்துள்ளதாக அந்நாட்டின் IRNA செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

“பத்தாஹ்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையை அந்நாட்டின் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மற்றும் ஈரானின் புரட்சிகர படைகளின் தளபதி ஆகியோர் அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

துல்லியமாக செயற்படும் “பத்தாஹ்” ஏவுகணை 1400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளை கணித்து தாக்குதல் நடத்தும் அளவு சக்தி வாய்ந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதுவரை உள்ள தொழிநுட்பங்களின் அடிப்படையில் உள்ள பாதுகாப்பு அரண்களை மீறி இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தும் அளவு வல்லமை கொண்டுள்ளது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட குறைந்தது ஐந்து மடங்கு வேகமாக பயணிக்கும். “பத்தாஹ்” ஏவுகணையின் வேகம் மணிக்கு 14 நிலைகளை தாண்டியுள்ளது. அதாவது மணிக்கு 15,000 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும். அத்தோடு சிக்கலான பாதைகளில் கூட செல்லும் அளவு தொழிநுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தாங்கள் வளிமண்டலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தாக்குதல்களை நடத்தும் அளவு சக்தி வாய்ந்த ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியதாக அறிவித்திருந்தது.

“பத்தாஹ்” ஏவுகணை என்பது ஏவுகணைத்துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சி என்றும் ஈரான் அறிவித்துள்ளது. ஒரு மிகப்பெரிய தலைமுறைப் பாய்ச்சல் என்றும் அதனை மெச்சிப் பேசியுள்ளது.

ஈரானின் இந்த ஏவுகணையால் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு என்ன ஆபத்து?

ஏவுகணைகளை தடுத்து நிறுத்தும் இஸ்ரேலின் “அயர்ன் டோம்”பாதுகாப்பு திட்டத்தால் கூட இந்த “பத்தாஹ்” ஏவுகணையை நிறுத்த முடியாது என்று ஈரான் அறிவித்துள்ளது. அத்தோடு சியோனிச கொள்கையில் ஆட்சி செய்யும் அமெரிக்காவுக்கு இது மிகப்பெரிய ஆபத்து என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாரிய எதிர்ப்பையும் மீறி ஈரான் தற்காப்பு என்ற பெயரில் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது.

அதே நேரம் 2018 ஆம் ஆண்டு ஈரானுனடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்திருந்தார். அத்தோடு பொருளாதார தடைகளை மேலும் பலமாக்கினார். அத்தோடு ஈரான் அணுகுண்டுகளை உருவாக்கக் கூடும் என்று மேற்கத்தைய நாடுகளும் பிராந்திய நாடான இஸ்ரேலும் பயந்துவருகிறது. ஆனால் அப்படியான திட்டங்கள் எதுவும் தங்களிடம் இல்லை ஈரானை தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

இன்னோர் பக்கம் அமெரிக்க மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டுக்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து முடங்கிப்போயுள்ளன.

இஸ்ரேல் என்ற நாட்டையே மறுத்து வரும் ஈரானின் இந்த திட்டங்களி முறையடிக்க இஸ்ரேல் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக இராஜதந்திர ரீதியில் பலவேறு முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டாலும் அவைகள் தோல்வியில்தான் முடிந்துள்ளன.

“எங்கள் எதிரிகள் நாங்கள் உருவாக்கும் ஆயுதங்களைப் பற்றி பெருமை பேசுவதை நான் கேட்கிறேன்,” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் கடந்த செவ்வாயன்று அறிவித்திருந்தார்.

“இதுபோன்ற எந்தவொரு வளர்ச்சிக்கும், நாங்கள் இன்னும் சிறந்த பதிலைக் கொண்டுள்ளோம் – அது தரையிலோ, வானத்திலோ அல்லது கடல் அரங்கில் இருந்தாலும் சரி. , தற்காப்பு மற்றும் தாக்குதல் இரண்டும் உட்பட.”

ஆனால் இப்படியான எந்த வளர்ச்சிக்கும் நாங்கள் சிறந்த பதிலை எங்களிடம் வைத்துள்ளோம். அது தரையிலோ, வானத்திலோ அல்லது கடல்சார் அரங்கில் இருந்தாலும், தற்காப்பு மற்றும் தாக்குதல் வழிமுறைகள் அதில் அடனும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...