follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுகொழும்பில் வாகனத்தரிப்பிட கட்டணங்கள் செலுத்தப்படவில்லை

கொழும்பில் வாகனத்தரிப்பிட கட்டணங்கள் செலுத்தப்படவில்லை

Published on

கொழும்பு மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டின் வருமான நிலுவை 6,280.50 மில்லியன் ரூபாய் என அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) புலப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் 2020/2021 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் அன்மையில் (06) கூடிய போதே இந்த விடயம் புலப்பட்டது

வாகனத்தரிப்பிட கட்டணங்களை அறவிடுவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட தனியார் நிறுவனங்களினால் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய மாதாந்த வாடகைக் கட்டணத்தை செலுத்தாமல் தொடர்ந்தும் கைவிடப்பட்டிருப்பதாகவும், 2021 டிசம்பர் 31 வரை 38 நிறுவனங்களிடமிருந்து அறவிடப்படவேண்டிய நிலுவைத் தொகை 265 மில்லியன் ரூபாய் எனவும் புலப்பட்டது.

மேலும், கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் இந்தப் பிரிவின் சேவையைப் பாராட்டுவதாகவும் இது இலங்கை பூராவும் பரவலடைய வேண்டும் எனவும் கோபா குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், 20 மாடிகள் உயரம் கொண்ட கட்டடங்களில் தீயணைப்பு செய்ய இந்தப் பிரிவுக்கு வசதிகள் காணப்படுவதாக இதன்போது குறிப்பிடப்பட்டது.
20 மாடிகளை விடவும் உயரமான கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் விமானப் படையின் உதவியைப் பெறுவது முக்கியமானது என குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

அதனால் விமானப்படையுடன் ஒருங்கிணைப்பை அதிகரித்துக்கொள்ளுமாறு குழுவியுன் தலைவர் ஆலோசனை வழங்கினார். மேலும், தீயணைப்புப் பிரிவில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம்...

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (19) அதிகாலை 03.00...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...