follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மழை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மழை

Published on

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் குறித்த அறிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றானது கி.மீ. 40-45 வரை காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...