தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் நடத்துனர்கள் இன்றி நான்கு பகுதிகளுக்கு நேற்று(19) சேவையை ஆரம்பித்தன.
மேற்படி பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் நடத்துனர்கள் பணத்தை மோசடி செய்வதாக எழுந்த முறைப்பாடுகள் காரணமாகவே இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலைக்கு கொட்டாவவிலுள்ள மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையம் நடத்துனர்கள் இன்றி பேரூந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன.