follow the truth

follow the truth

June, 6, 2024
Homeஉள்நாடுமலையக பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை

மலையக பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை

Published on

பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல், அந்த மகத்தான பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.

மலையக இளைஞர், யுவதிகளின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக இருந்த மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் கொட்டகலைக்கு வருகை தந்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது.

கொட்டகலை ஆசிரியர் கலாசாலையை கேந்திரமாக கொண்டு பல்லைக்கழகத்தின் முதற்கட்ட தொகுதியினை நிறுவுவதற்கும், மேலும் நிர்வாக ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு செல்வதற்குமான இறுதிக்கட்ட கலந்துரையாடலாக இது அமையப்பெற்றது.

மேலும், பல்லைக்கழகத்தில் எந்தவிதமான பாடவிதானங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மிக விரைவில் இலங்கை அரசு மற்றும் சர்வதேச ரீதியிலான உதவியுடன் இங்கு பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை நடைபெற்றது.

LATEST NEWS

MORE ARTICLES

வாயால் கூறுவதில் பயனில்லை – உடனடியாக சுற்றறிக்கையை விடுங்கள்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு மற்றும் சமைத்த உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்த...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 7 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, உருளைக்கிழங்கு, கோதுமை மா, வெள்ளை...

Starlinkக்கான பூர்வாங்க அனுமதி

இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இணைய சேவைகளை வழங்குவதற்கு "Starlink" நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க...