follow the truth

follow the truth

May, 14, 2025
Homeவணிகம்எயார்டெல் ரூ. 888 Freedom Plus Unlimited பெக்கேஜின் சலுகைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது

எயார்டெல் ரூ. 888 Freedom Plus Unlimited பெக்கேஜின் சலுகைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது

Published on

இலங்கை இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மொபைல் தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான Airtel Sri Lanka, தமது வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்திற்கு தொடர்ந்து மதிப்பு சேர்க்கும் வகையில், எயார்டெல் அதன் முற்கொடுப்பனவான ரூ. 888 Freedom Plus பெக்கேஜில் மூன்று பிரபலமான சமூக வலைத்தளங்களின் Apps களைச் சேர்த்துள்ளது, இது அதிக மதிப்பு, சுதந்திரம் மற்றும் வரையறையற்ற அணுகலை வழங்குவதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கை முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப, விஸ்தரிக்கப்பட்ட 888 பெக்கேஜ் இப்போது Airtel பாவனையாளர்கள் Telegram, IMO மற்றும் Viber ஆகிய மூன்று சமூக ஊடக Appsகளுக்கு வரையறையற்ற அணுகலை அனுபவிக்க வசதியளிக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த எயார்டெல் ஸ்ரீலங்காவின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி அஷிஷ் சந்திரா, “எங்கள் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகளை வழங்குவதற்காக எங்களது Airtel ரூ. 888 Airtel Freedom Plus பெக்கேஜ்ஜின் நன்மைகளை அதிகரித்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களுக்கு அதிக தேவை இருப்பதால், இப்போது பிரபலமான பயன்பாடுகளான Viber, IMO மற்றும் Telegram ஆகியவற்றை இந்த பெக்கேஜில் சேர்த்துள்ளோம். வாடிக்கையாளர்கள் இப்போது இந்த அதிகமான சேவைகளை மலிவு விலையில் ரூ. 888 இல் அனுபவிக்க முடியும், மேலும் அவர்கள் ஏற்கனவே இந்த பெக்கேஜ் மூலம் அதிக மதிப்பை அனுபவித்து வருகின்றனர் என்பது எங்களுக்குத் தெரியும்.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற, வசதியான மற்றும் மலிவான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கான எமது வாக்குறுதியை நாங்கள் தொடர்ந்து வழங்குகிறோம். TikTok, Instagram, Facebook, YouTube, Messenger, WhatsApp, Viber, IMO மற்றும் Telegram போன்ற பிரபலமான சமூக ஊடக தளங்களுக்கு வரையறையற்ற அணுகலை வழங்குவதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்கள் அந்த Appsகளைப் பயன்படுத்தும் முறையையோ அல்லது தனித்தனியாக கொள்முதல் செய்வதையோ மாற்ற வேண்டியதில்லை. வெவ்வேறு Appsகள். அவர்களின் தொடர்பு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய முடியும். இதனால்தான் Airtel Freedom பெக்கேஜின் மதிப்பை சந்தையில் வேறு எந்த பெக்கேஜும் ஈடுகட்ட முடியாது.” என தெரிவித்தார்.

எயார்டெல் 888 பெக்கேஜ் இந்த பிரபலமான சமூக ஊடக தளங்களுக்கு வரையறையற்ற அணுகலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், 30GB Data (1 GB/நாள் ஒன்றுக்கு), பாவனையாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் வரையறையற்ற தொடர்பை ஏற்படுத்த, வேறு எந்த நெட்வொர்க்கிற்கும் வரையறையற்ற அழைப்புகள், 1,000 எயார்டெல்லில் இருந்து எயார்டெல்லுக்கு SMSs மற்றும் 30 நாட்களுக்கு வேறு நெட்வொர்க்கிற்கு 50 SMSsகளை உட்பட எயார்டெல்லின் பிற பிரபலமான Freedom பெக்கேஜ்களின் அனைத்து நன்மைகளும் இதில் உள்ளடங்கும்.

இலங்கையின் தொலைத்தொடர்பு சேவைத் துறையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்த்தாக்கங்களில் முன்னணியில் இருக்கும் Airtel, அதன் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் எதிர்பார்ப்புகளை விட அதிநவீன தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. அதிக நன்மைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எயார்டெல் 888 பெக்கேஜ், வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற மொபைல் அனுபவத்தை வழங்க எயார்டெல்லின் உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு எயார்டெல் 888 பெக்கேஜை செயல்படுத்த மற்றும் ரூ.888ஐ நேரடி ரீசார்ஜ் அல்லது My Airtel App மூலம் செயல்படுத்தி பலவிதமான சமூக ஊடக வலைத்தளங்களுக்கு வரையறையற்ற உலாவுதலை செயல்படுத்த முடிவதுடன் https://recharge.airtel.lk / மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம். 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் ஶ்ரீலங்கா நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். Airtel Sri Lanka வழங்கும் தொழிநுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் சேவை சிறப்புகள் இலங்கை இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவியுள்ளது. தற்போது, ​​Airtel இலங்கையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் அதிநவீன 5G-தயாரான 4G வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது மற்றும் அதிகபட்ச மதிப்பை வழங்குவதற்காக அதன் நெட்வொர்க் கவரேஜை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

Airtel பற்றி மேலும் அறிய, MyAirtel App அல்லது சமூக ஊடகங்கள் மூலம் Airtel உடன் இணைக்கவும் அல்லது www.airtel.lk ஐப் பார்வையிடவும்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்கத்தின் விலை சடுதியாக குறைவு

நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (14) காலை கொழும்பு...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...