பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அரசியல் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில், குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு தரப்பிரும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.