பொலன்னறுவையில் புகையிரத கடவை திருத்தம் காரணமாக குறித்த பகுதியின் போக்குவரத்து 03 நாட்களுக்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், பொலன்னறுவை மற்றும் மன்னம்பிட்டிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் மாணிக்கம் பட்டிய பாதையில் அமைந்துள்ள புகையிரத கடவைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடவை எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 07 மணி முதல் 11 ஆம் திகதி பிற்பகல் 02.30 மணி வரை பகுதியளவிலும், 12 ஆம் திகதி காலை 07 மணி முதல் 13 ஆம் திகதி இரவு 08.30 மணி வரையிலும் முழுமையாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.