பராமரிப்பு காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் நாரஹேன்பிட்டி மற்றும் நுகேகொட நிலையங்களுக்கு இடையிலான கலிங்க மாவத்தை கடவை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 21 ஆம் திகதி காலை 08 மணி முதல் மறுநாள் காலை 05 மணி வரை மூடப்படும். இதன் போது மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளை புகையிரத திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.