முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் MiG விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு உதயங்க வீரதுங்க மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.