நாளை (25) காலை 8 மணி வரை தமது பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் வைத்தியர்களின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்தது.
ஆட்சேர்ப்பு செயற்பாட்டுக்கு அனுமதி வழங்குதல், தொழிற்சங்கத் தலைவர்களை தண்டிக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துதல் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இன்று காலை ஆரம்பமான இந்த பணிப்பகிஷ்கரிப்பில் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வக வல்லுநர்கள் மற்றும் தொழில்சார் சிகிச்சை நிபுணர்கள் ஆகிய 5 தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன.
இந்த பணிப்பகிஷ்கரிப்பினால் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.